செவ்வாய், 28 டிசம்பர், 2010

அதிகரிதுகொண்டு வரும் விவசாயிகளின் தர்கொல்லைகள்

இந்தியாவில் சமீப காலமாக விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து உள்ளது. விவசாயிகளின் தற்கொலை குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற தகவல் மையம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி கடந்த ஆண்டில் (2009) 17,368 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். இது 6 ஆண்டுகளில் இல்லாத மோசமான எண்ணிக்கை ஆகும்.
 
இதில் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில்தான் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். 62 சதவீதம் பேர் இந்த மாநிலங்களில் தற்கொலை செய்து உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
 
2008-ம் ஆண்டில் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்து இருந்தனர். அதை விட 2009-ம் ஆண்டில் கூடுதலாக 1172 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர்.
 
கடந்த ஆண்டில் மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 2,872 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டு களில் அங்குதான் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக இருந்து வருகிறது.

அதற்கு அடுத்தப்படியாக கர்நாடகத்தில் 2,282 பேர் தற்கொலையில் ஈடுபட்டனர். ஆந்திராவில் 2,414 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,395 பேரும், சத்தீஷ்கரில் 1,802 பேரும் தற்கொலை செய்தனர்.
 
1997-ம் ஆண்டில் இருந்து 2,16,500 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற தகவல் மையம் தெரிவித்துள்ளது. மராட்டியத்தில் மட்டும் 44,276 பேர் தற்கொலை செய்து உள்ளனர். 
 
நன்றி-  மாலை மலர்
 
 
 

வியாழன், 16 டிசம்பர், 2010

தமிழ்நாடு அரசின் சத்துணவுத் திட்டம் - அமைப்பும் செயலாக்கமும்.

தமிழக அரசின் திட்டங்களில் மிக முக்கியமானது சத்துணவுத் திட்டம்.  இது அகில இந்திய அளவில் பாராட்டப் பெறுகின்றது. பள்ளிகளில் பயிலும் ஏழைச் சிறுவர் சிறுமியர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் இன்றைய நிலையில் உற்று நோக்குகின்றபோது, செயல்படுவதில் கண்காணிக்கப்படும் தொய்வுகள் இருப்பதனை அறிய முடிகின்றது. எனவே உயரிய நோக்குடன் தீட்டப்பட்ட இத்திட்டத்தின் பயன்கள் முழுமையாக ஏழைச் சிறார்களைக் சென்றடைவதில்லை.

 இதிலுள்ள ஓட்டைகள் ஊழலுக்குத் துணை போவதாக உள்ளன.    என்று, 1925ம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தலைவராக இருந்த சர். பி.டி. தியாகராசர் நகர அளவில் சிறியதாக மதிய உணவுத் திட்டத்தைத் துவங்கினார். அதன்பின்னர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரால் பொறுப்பேற்றபோது இத்திட்டத்தை மதிய உணவுத் திட்டம் என்ற பெயரில் தமிழ் நாடெங்கும் விரிவு படுத்தினார். பிறகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வரானவுடன் மதிய உணவுத் திட்டம் சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டு தொடர்ந்து இயங்கி வருகிறது.

பள்ளிக்குச் செல்லும் ஏழைச் சிறார்கள் தங்கள் பெற்றோரின் வறுமையான குடும்பச் சூழலில் பட்டினி கிடந்து அதனால் அவர்கள் பயிலும் கல்விக்குப் பாதிப்பு வந்து விடக் கூடாது என்ற அரிய உன்னத இலட்சியத்தின் அடிப்படையில் அவர்களது பசியை ஆற்றி கல்வியைத் தொடர வழி செய்யும் நோக்கத்துடன் இத்திட்டம் துவங்கப்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள கிராமங்களில், நகரங்களிலுள்ள பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவ மாணவியருக்கு ஆரம்பத்தில் அரசு நிர்ணயித்த விகிதத்தின்படி அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றைச் சமைத்து மதிய வேளையில் கலவைச் சாதமாக வழங்கப்பட்டது.

இத்திட்டம் மேலும் வளர்ச்சிப்பெற்று ஏற்கனவே வழங்கப்பட்ட உணவுடன் சுண்டல், பச்சைப் பருப்பு, உருளைக் கிழங்கு, வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை அல்லது வாழைப்பழம் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இத்திட்டம் செயல்பட ஒவ்வொரு சத்துணவு மையத்திற்கும் ஒரு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகியோர் மாதத் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்றுள்ள நிலையில் இத்திட்டத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்கின்றபோது பயன்கள் முழுமையாக ஏழைச் சிறார்களைச் சென்றடைவதில்லை என்பது கண்கூடு.

பொதுவாகவே அரசின் பெரும்பான்மையான திட்டங்கள் அவை தீட்டப்பட்ட நோக்கத்தின்படி மக்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என்று பல சமுதாய ஆர்வலர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். சத்துணவுத் திட்டத்தைப் பொறுத்த அளவில் அதில் குறை ஏற்படக் காரணமானவர்களே அதில் பணியாற்றும் ஊழியர்களும் உரிய முறையில் கண்காணிக்காத சில மேற்பார்வை அலுவலர்களும்தான். அண்மையில் நடைபெற்ற முட்டை சாப்பிடாத மாணவ, மாணவியர்க்கு வாழைப்பழம் வழங்கும் துவக்க விழாவின் போது கூட இதில் முறைகேடு எதுவும் செய்யக்கூடாது என்று மாண்புமிகு தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 இதற்கு முறைகேடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்ற ஐயந்தான் காரணம். சத்துணவு மையங்களின் குறைபாடுகள் இப்போதுதான் என்றில்லை. ஆரம்பம் முதலே இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றைக் களைய தணிக்கை செய்யும் அலுவலர்கள் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆயின் அவை போதுமானதாக இல்லை. குறைகள் தொடர்கின்றனவே ஒழிய நீங்கியபாடில்லை. சமுதாய நலனில் அக்கறையுடன் ஏழைச் சிறார்களுக்கு ஏற்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், ஏமாற்றுவதற்கு முயற்சிக்காமல் தங்கள் கடமையினைச் செய்திட சத்துணவு மையங்களின் ஊழியர்கள்தான் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் இத்திட்டம் முழுமையடையும்.

இதில் சத்துணவு மையங்களின் செயல்பாடு குறித்து அரசின் நோக்கமும் அது செயல்படும் முறையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு சத்துணவு மையத்திலும் அது இணைக்கப்பட்ட கல்விக் கூடத்தில் பயிலும் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மாணவ, மாணவியர்களின் பெயர்கள் விவரம் குறித்த பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அதில் அன்றாடம் பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியர்களை பள்ளியின் வருகைப் பதிவேட்டில் கண்டவாறு சம்பந்தப்பட்ட அமைப்பாளரால் குறித்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அரசு வகுத்துள்ள விகிதாச்சாரப்படி அரிசி, பருப்பு, காய்கறிகள், முட்டை போன்றவற்றைக் கணக்கிட்டு, எடுத்து, சமைத்து வழங்கவேண்டிய பணி அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகியோரைச் சாரும்.

வருகை புரிந்துள்ள மாணவ, மாணவியருக்குச் சேர வேண்டிய விகிதத்தின்படியான உணவுப் பொருட்களை எடுத்துச் சமைப்பதற்குப் பதிலாக, அதற்கும் குறைவான அளவில் பொருட்களை எடுத்துச் சமைத்து உணவு வழங்கப்படுகின்றபோது சோதித்துப் பார்த்தால் மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் அரசு குறிப்பிட்ட எடையுள்ள சோறு, சாம்பார் ஆகியவை வழங்கப்படாத நிலை பெரும்பான்மையான பள்ளிகளில் உள்ளது.

இது தவிர மதிய உணவு வழங்கப்படுகின்றபோது முன்னறிவிப்பின்றி சென்று பார்த்தால் வருகைப் பதிவேட்டில் கண்ட மாணவ, மாணவியர் எண்ணிக்கையை விடக் குறைவானவர்களே உணவருந்திக் கொண்டிருப்பார்கள். இது குறித்து அபை்பாளரிடம் கேட்டால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களில் பலர் தங்கள் வீட்டில் விசேஷமென்றும் ஊரில் திருவிழா என்றும் கூறிவிட்டு, மையத்தில் மதிய உணவு கொள்ளாமலே சென்று விட்டார்கள் என்ற பதில் உடனடியாகக் கிடைக்கும்.

சத்துணவுப் பொருட்கள் வரவு செலவு குறிக்கும் இருப்புப் பதிவேட்டினைப் பார்த்தால் காலையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்கள் குறித்த வருகைப் பதிவேட்டின் அடிப்படையிலேயே உணவுப் பொருட்கள் கணக்கிடப்பட்டு, எடுத்து, சமைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் வருகைப் பதிவேட்டிற்கும் குறைவான மாணவர்களே மதிய உணவு சாப்பிடுகிற நிலையில் காலையில் வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உணவு மிகுதியாகவே இருக்க வேண்டும். அனால் அப்படி இருக்காது. சாப்பிடுகின்ற மாணவ, மாணவியர்க்கும் அரசு குறிப்பிட்ட எடையை விடக் குறைவான அளவு உணவே பரிமாற்றப்பட்டிருக்கும். அப்படியாயின் பள்ளி வருகைப் பதிவேட்டின் அடிப்படையில் கணக்கிட்டு எடுக்கப்பட்ட உணவுப் பொருட்களில் சமையலுக்குப் பயன்படுத்தியது போக மீதியுள்ளவற்றை சத்துணவுப் பணியாளர்கள் தங்கள் சொந்த உபயோகத்திற்கு சுருட்டி எடுத்துச் சென்று விட வாய்ப்பிருக்கிறது.

அதுவே இன்று பெரும்பாலான பள்ளிகளில் நடந்து கொண்டும் இருக்கிறது. முட்டைகள் வழங்கும் விவகாரத்தில் சொல்லவே வேண்டாம். வருகைப் பதிவேடு எண்ணிக்கைக்குக் குறைவாகவே முட்டைகள் வழங்கப்படுகின்றன. அல்லது அரைமுட்டை வழங்கும் நிலையைக் கூட சில பள்ளிகளில் காண நேரிடுகிறது. காரணம் கேட்டால் முட்டைகளை அவித்துப் பார்ததபோது அவை கெட்டுவிட்டிருந்ததெனக் கூறுவர். சில மையப் பொறுப்பாளர்கள் முட்டைகள் குறைவாகவே தங்கள் மையங்களுக்குக் கொடுக்கப்பட்டதென்ற உண்மையை உளறி விடுவதும் உண்டு. தணிக்கை செய்யும் அலுவலர்கள் உண்மையுடனும் உறுதியுடனும் செயல்பட்டு, தங்கள் தணிக்கையின்போது உணவுப் பொருட்களின் இருப்பை, இருப்புப் பதிவேட்டில் கண்ட அளவு அல்லது எண்ணிக்கையுடன் சரியாக எடை போட்டோ அல்லது எண்ணியோ ஒப்பிட்டுப் பார்த்தால் பெருத்த வேறுபாடு நிச்சயம் இருக்கும். இதனை அவர்கள் தணிக்கையின் போதும் கண்டுகொள்ளாமல் இருப்பதில்தான் கையூட்டும் ஊழலும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் ஒரு பகுதி ஊழலில் உளறிக் கிடக்கும் மேற்பார்வை அலுவலர்களின் வீடுகளக்கோ அல்லது தேவைப்படும் வியாபார இடங்களுக்கோ சென்று விடும் போக்கும் உள்ளது.

இதற்கு அண்மையில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த பொதக்குடி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மையத்திற்கான முட்டைகள் லட்சுமாங்குடி டாஸ்மார்க் மதுபான பாரில் கொடுக்கப்பட்டு மையப் பொறுப்பாளர் மாட்டிக் கொண்டதே ஓர் உதாரணம். இதே நிலைதான் பல சத்துணவு மையங்களில் உள்ளது. ஆனால் செய்தியாக வரவில்லை. அவற்றை நிரூபிப்பதென்பது மிக எளிதான செயல். ஆனால் அதிகாரம் பெற்ற சில குறிப்பிட்ட அலுவலர்களும், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பனர், அமைச்சர் அல்லது மேற்பார்வைக் குழு உறுப்பினர்கள் போன்ற குறிப்பிட்ட சிலர் மட்டுமே சத்துணவு மையங்களை சோதனையோ அல்லது தணிக்கையோ செய்யலாம் என்றிருக்கின்றபோது பொதுமக்களோ அல்லது ஊழலை ஒழிக்கப் புறப்படும் ஆர்வலர்களோ வெளியிலிருந்து கொண்டு என்ன செய்ய முடியும்?

நேர்மையுள்ள அரசு தணிக்கை அலுவலர்களின் செயலாக்கம் இங்கு எட்டுவதில்லை. அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகளைக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட சத்துணவு மைய அமைப்பாளருக்கு விளக்கம் கோரி உயர் அலுவலர்கள் குறிப்பனுப்பலாம். பிறகு சிறிது காலம் கூட பணியிடை நீக்கம் செய்யலாம். ஆனால் பெரும்பாலும் சத்துணவு மைய ஊழியர்களின் நியமனங்களே அரசியல் கட்சிகள் சார்புடையனவாக இருப்பதால் அரசியல் பிரமுகர்களின் தலையீடு காரணமாக தவறிழைத்தோர் தப்பி விடுகின்றனர். பிறகு என்ன? இவ்வூழல் தொடர் கதையாகி விடுகிறது. ஏழைக் குழந்தைகளுக்குத் தங்களால் தருமம் செய்ய இயலவில்லையென்றாலும் அரசு அவர்களுக்குச் செய்கின்ற உதவிகளில் தங்களை இணைத்துக் கொள்வதற்குப் பதிலாக, சுரண்டுகின்ற பேர்வழிகளை எவ்வாறு அழைப்பது?

இதனையே சத்துணவு மையங்கள் தணிக்கையின்போது நேர்யைுள்ள அரசு அலுவலர்கள் எடுத்துரைத்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கிறது.இதற்குத் தீர்வுதான் என்ன?  முதலில் எல்லா தணிக்கை அலுவலர்களும் இத்திட்டத்தின் உயரிய உன்னத நோக்கத்தைக் கருத்தில் கொண்டு நினைத்தாலும் ஏழைக் குழந்தைகளுக்குத் தங்களால் செய்ய முடியாத தருமத்தை அரசு தங்களுக்கு அளித்திருக்கும் பணியின் மூலமாகச் செய்கிறோம் என்ற மனசாட்சியுடன் உண்மையுடனும் உறுதியுடனும் செயல்பட வேண்டும்.

 இதில் எவ்வாறான குறுக்கீடுகள் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாத, தேவையாயின் எதிர்த்து நிற்கக் கூடிய தெளிவான நிலையும் திண்ணிய நெஞ்சமும் அவர்களுக்கு வேண்டும். இரண்டாவது, சத்துணவு மைய அமைப்பாளர்கள் இப்பணியை ஏற்க ஒப்புக் கொண்ட வகையில் தங்கள் ஊதியம் போன்றவை எப்படியிருந்தாலும், பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்காகத் தாங்கள் செய்யும் இப்பணி தாய் நாட்டிற்குச் செய்யும் தருமத்தின்பாற்பட்ட பணி தவத்திற்கும் மேலானது என்ற சேவை மனப்பான்மையுடன் ஒவ்வொரு நாளும் இயங்க வேண்டும்.மூன்றாவது, உணவுக் கிடங்குகளிலிருந்து உணவுப் பொருட்களை வழங்கும் பொறுப்பாளர்கள் ஏழைக் குழந்தைகளுக்கான இத்திட்டம் அறத்தின்பாற்பட்டது எத்தனை கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டாலும் அதனைவிடப் புனிதமானது புண்ணியம் சேர்ப்பது என்று உணர்ந்து பட்டியலிட்ட முழுப் பொருள்களையும் அதில் கண்டவாறு சத்துணவு மையங்களுக்கு அனுப்பி வைப்பதோடு குடிமைப் பொருள்கள் வழங்குதுறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேற்பார்வை அலுவலர்கள் அவை லாரிகளில் செல்லும் வழியில் இடையிடையே முன்னறிவிப்பின்றி தணிக்கை செய்து முழுமையாக போய்ச் சேர்வதையும் உரியவாறு திட்டமிட்டுக் கண்காணக்க வேண்டும்.நான்காவதாக, ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவியர் வருகை எண்ணிக்கை, அவர்களுக்கான விகிதாச்சாரப்படி பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் அளவு, அன்று கொடுக்கப்படும் முட்டைகள் மற்றும் வாழைப் பழங்களின் எண்ணிக்கை, இருப்பு விவரம் ஆகயிவற்றைக் குறிக்கும் தகவல் பலகை ஒன்றினை சத்துணவு மையத்தின் முன்பு பொதுமக்கள் பார்வையில் படும் வண்ணம் வைக்க வேண்டும்.

இதனால் தவறுகள் நேர்ந்தால் ஊர்ப் பொதுமக்களே தட்டிக் கேட்பது சாத்தியமாவதோடு ஊழல்கள் குறைய வாய்ப்புண்டு.ஐந்தாவதாக, சத்துணவு மையங்களுக்கான உணவுப் பொருட்கள் சத்துணவு மையக் கட்டிடத்திலோ அல்லது அதனுடன் இணைந்த பள்ளியில் மட்டும்தான் வைக்கப்பட வேண்டும். திருட்டுப்பயம், மழைச்சாரல், ஈரமான தரை போன்ற காரணங்களைக் காட்டி அருகிலுள்ள வீடுகளில் இருப்பு வைக்கும் வழக்கம் அறவே தவிர்க்கப்பட வேண்டும். இது சத்துணவு மையப் பணியாளர்கள் தவறான முறையில் உணவுப் பொருட்களைச் சேகரித்து வைத்து வெளியில் எடுத்துச் செல்வதனைத் தடுக்க வகை செய்யும்.ஆறாவதாக, தெய்வத்திற்குச் சமமான ஏழைச் சிறார்களுக்குச் சேர வேண்டியதைத் தடுத்து உணவுப் பொருட்களைத் திருடும் அல்லது பகல் கொள்ளையடிக்கும் சத்துணவு மையப் பணியாளர்களையோ அவர்களுக்குத் துணைபோகும் அலுவலர்களையோ கண்டுபிடிக்க நேரிட்டால் அவர்களைக் கண்டித்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் கடுமையானதாக இருக்க வேண்டும்.

ஏழாவதாக, 1980, 1990களில் சத்துணவு மையங்களின் செயற்பாடுகள் இத்திட்டத்தின் முக்கியத்துவம் காரணமாக மாவட்ட ஆட்சியாளர்களால் தனிக் கவனத்துடன் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் துணை ஆட்சியர் அந்தஸ்துக்குக் குறையாத அலுவலர்கள் தணிக்கை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு அவர்கள் மாதந்தோறும் குறைந்த பட்சம் 20 மையங்களையாவது தணிக்கை செய்து அறிக்கைகள் அனுப்ப வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இலக்கை எட்டத் தவறிய தணிக்கை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியாளர்களின் கடுமையான கண்டனத்திற்கு ஆளானதோடு அவர்களது விளக்கங்கள் கேட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்ட காலம் அது.

அவற்றோடு தணிக்கையின்போது குறைகள் காணப்பட்ட சத்துணவு மையங்கள், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிலுவையிலிருப்பின் அவற்றிற்கான காரணம், தண்டனை பெற்றவர்கள், வேலையிலிருந்து நீக்கப்பட்டோர் போன்ற விவரங்கள் அப்போது ஆய்வு செய்யப்பட்டன. அதற்குப் பிறகு சத்துணவு மையப் பணியாளர் சங்கங்கள் வளர்ந்து அவற்றிற்கு அரசியல் ஆதரவும் பெருகிவிட்டதால் சத்துணவு மையங்கள் கண்காணிப்பில் அன்றிருந்த நிலை இன்று இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

 இப்போதும் அன்றைய நிலை மீண்டும் தொடரப்பட்டு பெரிய அளவில் தவறு செய்யும் சத்துணவு மையப் பணியாளர்களை, துணை ஆட்சியர் அந்தஸ்துக்கு மேற்பட்ட அரசு தணிக்கை அலுவலர்கள் தணிக்கையின்போது குறைகள் கண்டு பிடிக்கப்பட்டவுடனேயே விளக்கம் ஏதும் கோராமல் தயவு தாட்சண்யமின்றி பணியிலிருந்து விடுவிக்கலாம் என்று அரசு முடிவெடுத்து அரசு ஆணை பிறப்பிக்குமேயானால் சத்துணவு மையச் செயற்பாடுகளில் ஊழல்கள் குறைய வாய்ப்புண்டு.

 அரசியல் பிரமுகர்கள் அல்லது சங்க அமைப்புகள் தலையிடவும் போதிய கால அவகாசம் இருக்காது. இவ்வாறான கேசுகளில் தணிக்கை அலுவலர் தமது விரிவான அறிக்கையை உடனே மாவட்ட ஆட்சியர் பெயருக்கு அனுப்பிவிட்டு நாளேடுகளுக்கும் செய்தியைத் தெரிவித்துவிட்டால் தவறு செய்வோரும் அச்சத்தின் காரணமாகத் திருந்த வாய்ப்புண்டு.மேற்குறிப்பிட்ட ஏழு கருத்துக்களும் மக்கள் விழிப்புணர்வு பெறும் பொருட்டும் சத்துணவு மையங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவும் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இவற்றின் செயலாக்கம் சத்துணவு மைய அமைப்பாளர்கள், தணிக்கை அலுவலர்கள், ஆட்சியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர்தம் நிலைப்பாட்டைப் பொறுத்துதான் அமையும்.

அழக் கொண்ட எல்லாம் அழப்போம்
இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை.
(வினைத் தூய்மை குறள்)

மு. சண்முகம்,மாவட்ட வருவாய் அலுவலர் (ஓய்வு).
நன்றி- குடிமக்கள் முரசு

வெள்ளி, 3 டிசம்பர், 2010

வேளாண்மை துறைவாரியான திட்டங்களை விரைந்து செயல்படுத்திட

வேளாண்மை துறைவாரியான திட்டங்களை விரைந்து செயல்படுத்திட 2010 - 11 ஆம் ஆண்டிக்கு காலவரையறைக்கு உட்பட்ட செயல் திட்டம் தயாரித்து பயனாளிகளுக்கு நேரடியாக திட்டப்பயன் சென்றடைதல் குறித்து அரசாணை (டி) எண். 234 1.12.1020 அன்று வேளாண்மை துறையால் வெளியிடப்பட்டுள்ளது.


வேளாண் துறையில் 2010-11 ஆம் ஆண்டில், மாநிலத் திட்டங்கள், மத்திய மாநில சார்புத் திட்டங்கள் மற்று மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படும் திட்டங்கள், ரூ.1975.93 கோடி நிதி ஒதுக்கீட்டில், வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக, வேளாண் பொறியியல், விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு ஆகிய துறைகள் மற்றும் தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழக மூலமாக செயல்படுத்தப்பட்டு வருன்றன.

2) வேளாண் துறையில் பணியாற்றி வரும் விரிவாக்கப் பணியாளர்களை ஊக்கப்படுத்து வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்று சிறப்பத்த வேளாண் கருத்தரங்க மற்றும் அலுவலர்கள் மாநாடு, மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 24.11.2010 அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. வேளாண் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள் பங்கேற்ற இம்மாநாட்டில், விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், உற்பத்தியினை மேலு அதிகரிக்கு வகையிலும், அறிவுரைகள் வழங்கப்பட்டன. மாநாட்டின்போது நடைபெற்ற கருத்தரங்கில், பல்வேறு வேளாண் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த வல்லுநர்கள், உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான புதிய நவீன தொழில்நுட்பங்களை வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்.

3) தற்போது, பயிர் சாகுபடிக்கு சாதகமாக தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை போதிய அளவு பெய்துள்ளதன் காரணமாக, வேளாண் பயிர்களின் சாகுபடி சென்ற ஆண்டினைக் காட்டிலு அதிகமான பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலு, தற்சமய நீர்நிலைகளில் உள்ள இருப்பு நிலவரத்தின்படியு, சாதகமான பருவ நிலை காரணமாகவும் மேலு கூடுதலான பரப்பில் சாகுபடி மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

4) எனவே, சாதகமான இச்சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இக்கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப தகவல்கள் மற்றும் அறிவுரைகளை, அதே வேகத்தில், சிறிதும் பிறழாமல், களப்பணியாளர்கள் மூலம் விவசாயிகளைச் சென்றடைய செயல் திட்ட" ஒன்று வகுத்து அதன் மூல திட்டப்பயன்கள் விவசாயிகளுக்கு முழுமையாக காலத்தே சென்றடைய வேண்டும் என்று அரசு கருதுறது.

5) அவ்வாறே, வேளாண் துறையின் அனைத்து துறைத் தலைவர்களும் அனைத்து திட்டப் பணிகளையும் உரிய காலவரையறையுடன், கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுவதற்கான செயல் திட்ட குறித்து ஆணை வெளியிடப்படுறது:-

* அனைத்துத் திட்டங்கள் வாரியான, இன வாரியான, மானியங்களுக்கு ஏற்ப, பயனாளிகளை தெரிவு செய்து, தேவைப்பட்டியல் ஒன்று கிராம வாரியாக தயாரிக்கப்பட வேண்டும். இந்த பயனாளிகளுக்கு உரிய அடையாள அட்டைகள் 15.12.2010 க்குள் வழங்கப்பட வேண்டும். இந்த அடையாள அட்டையினை பூர்த்தி செய்யும்போது, வருவாய்த்துறை அலுவலர்களின் துணையுடன், நில அளவை எண், நில உரிமையாளர் மற்றும் இருப்பட முகவரி போன்றவை தவறுதலின்றி பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

* பல்வேறு திட்டங்களின்கீழ் இனவாரியாக தேவைப்படும் இடுபொருட்களான தரமான விதைகள், உயிர் உரங்கள், இரசாயன உரங்கள், நுண்ணூட்டக் கலவை உரங்கள், பயிர் பாதுகாப்பு கருவிகள் மற்றும் மருந்துகள், இயந்திரங்கள் மற்றும் பண்ணைக் கருவிகள், சொட்டுநீர் மற்று தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் போன்றவற்றை காலத்தே கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு வெகு அருகாமையில் கிடைக்கும் வகையில் உரிய மையத்தில் இருப்பு வைத்திட வேண்டும்.

* இடுபொருட்களை வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், வேளாண் ஆலோசனை மையங்கள் (அக்ரி க்ளினிக்), அரசு விதைப் பண்ணைகள், கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் இதர அரசு மற்றும் கூட்டுறவு அலுவலகங்கள் போன்ற மையங்களின் மூலமாக வழங்ட வேண்டும். மேலும், நடமாடும் இடுபொருள் வழங்கு மையங்களில் இருப்பு வைத்து இவ்விடுபொருட்களை வழங்கலாம். இவ்விடுபொருட்கள் உரிய அலுவலர்களின் முன் அனுமதி பெற்று இருப்பு வைத்து விநியோக்கப்பட வேண்டும். இப்பணிகள், 2011, ஜனவரி 15- தேதிக்குள் முடிக்குமாறு திட்டமிட்டு செயலாற்றிட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும்.

* இவ்விடுபொருட்கள் விநியோகத்திற்கான நாளை முன்கூட்டியே ஊடகங்கள், பத்திரிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள், தண்டோரா போன்றவைகள் மூலம் விவசாயிகளுக்குத் தெரிவித்திட வேண்டும்.

* கிராமவாரியான இடுபொருள் வழங்கும் பணி பல்வேறு காலக்கட்டங்களில் ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி, சட்ட ஒழுங்கு பாதிக்கப்படாமல், குறிப்பட்ட நாளில், குறிப்பட்ட கிராமங்களில் இடுபொருட்கள் வழங்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும்.

* இவ்விடுபொருள் வழங்கும் முகாம்களை துவக்குபோது மாவட்ட ஆட்சியர், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்று அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்ற முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் பயனாளிகளின் தெரிவு பட்டியலின்படி, திட்டவாரியான இடுபொருட்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.

* கிராம விழிப்புணர்வு முகாம் கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் அனைத்து திட்டங்களின் இனவாரியான இலக்குகளின்படி, பயனாளிகளுக்கு அரசின் இடுபொருட்கள் மற்று திட்ட பயன்கள் 15.2.2011க்குள் சென்றடையும் வகையில் துறை அலுவலர்கள் செயலாற்ற வேண்டு.

* திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக எவ்விதக் குறைபாடும் இன்றி தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உரிய காலத்தில் சென்றடைய வேண்டு.

* மேற்கண்டவாறு திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் பணிகளை மேற்பார்வையிட, ஒவ்வொரு துறையிலும் உயர் அலுவலர்களை நியமன செய்து, பயனாளிகளுக்கு காலத்தே அரசின் பயன்கள் சென்றடைவது கண்காணிக்கப்பட வேண்டும். இந்த கண்காணிப்பை, வட்டார அலுவலர் 100 சத அளவிலு, மாவட்ட அலுவலர்கள் 25 சத அளவிலு, மாநில அலுவலர் 10 சத அளவிலு எவ்வித முன்னறிவிப்பன்றி ஆய்வு செய்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டு.

* தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் குறித்த முழு விவரங்கள் மற்றும் அவர்களுக்கு திட்ட வாரியாக வழங்கப்பட்ட இடுபொருட்கள் மற்றும் இதர பொருட்கள் குறித்த வேளாண்மை மற்றும் அனைத்து சகோதரத் துறைகளின் அனைத்து விவரங்களை வட்டார அளவில் வேளாண்மை உதவி இயக்குநரும், மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநரும் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வார இறுதியிலும் பணி முன்னேற்றம் குறித்த அறிக்கை சபந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் (இதற்கான படிவம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது). இதனை துறை மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது பார்வைக்கு வைக்க கடமைபட்டவர்கள் ஆவர்.

6) மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திட்டப் பயன்கள் முழுமையாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சென்றடையுமாறு துறைத் தலைவர்கள் செயலாற்றிட வேண்டு என்று அரசு ஆணையிடுறது. மேலு, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வேளாண் துறையின் சகோதரத் துறைகளின் பணியாளர்கள் ஒருங்ணைந்து செயல்பட வேண்டு என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது  .


மேற்கண்ட இந்த அரசு ஆணை(டி) எண். 234 , கீழ்கண்ட அரசு அலுவலர்களுக்கு அனுப்பட்டு உள்ளது


வேளாண்மை ஆணையர், சென்னை - 5 தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர், சென்னை - 5

வேளாண்மை விற்பனை மற்றும் வேளான் வணிகத்துறை ஆணையர், சென்னை - 32
தலைமை பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, சென்னை - 35 அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ( சென்னை நீங்கலாக )

நகல்
அரசு முதன்மைச் செயலாளர், வருவாய்த் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 9