இந்தியாவில் சமீப காலமாக விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து உள்ளது. விவசாயிகளின் தற்கொலை குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற தகவல் மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த ஆண்டில் (2009) 17,368 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். இது 6 ஆண்டுகளில் இல்லாத மோசமான எண்ணிக்கை ஆகும்.
இதில் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில்தான் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். 62 சதவீதம் பேர் இந்த மாநிலங்களில் தற்கொலை செய்து உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
2008-ம் ஆண்டில் 16,196 விவசாயிகள் தற்கொலை செய்து இருந்தனர். அதை விட 2009-ம் ஆண்டில் கூடுதலாக 1172 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர்.
கடந்த ஆண்டில் மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 2,872 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டு களில் அங்குதான் விவசாயிகளின் தற்கொலை அதிகமாக இருந்து வருகிறது.
அதற்கு அடுத்தப்படியாக கர்நாடகத்தில் 2,282 பேர் தற்கொலையில் ஈடுபட்டனர். ஆந்திராவில் 2,414 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,395 பேரும், சத்தீஷ்கரில் 1,802 பேரும் தற்கொலை செய்தனர்.
அதற்கு அடுத்தப்படியாக கர்நாடகத்தில் 2,282 பேர் தற்கொலையில் ஈடுபட்டனர். ஆந்திராவில் 2,414 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,395 பேரும், சத்தீஷ்கரில் 1,802 பேரும் தற்கொலை செய்தனர்.
1997-ம் ஆண்டில் இருந்து 2,16,500 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற தகவல் மையம் தெரிவித்துள்ளது. மராட்டியத்தில் மட்டும் 44,276 பேர் தற்கொலை செய்து உள்ளனர்.
நன்றி- மாலை மலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக