நவீன விஞ்ஞான வளர்ச்சியில் இயற்கையின் அற்புதங்களை உள்ளங்கைக்குள் கொண்டுவந்துவிட்டோம். இதன் வளர்ச்சி ஒரு புறம் ஆக்கபூர்வமாக தோன்றினாலும் மற்றோரு பக்கம் பேரழிவுகளை உண்டாக்குகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்கமுடியாது.
இந்தியாவில் முதல் முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுத் தாவரம் ஒன்றை அறிமுகப்படுத்த மரபணுத்தாவர ஒழுங்கு சபை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய வகை கத்திரிக்காய் ஒன்றுக்கு இந்தியாவின் மிகப் பெரிய தாவர ஆராய்ச்சி நிறுவனமான மராட்டிய மாநிலத்தில் உள்ள மாகிகோ நிறுவனம் அனுமதியளித்துள்ளது. பூச்சிகளால் அதிகம் பாதிப்பு அடையாமல் இருக்கின்ற எதிர்ப்பு சக்தி இந்த புதிய வகை கத்தரிக்காயில் உள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் என எல்லா உயிரினமும் அந்தந்த மரபணுவின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது . இந்த மரபணு பதிவு அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு வருகிறது.
ஜீன் எனப்படும் இந்த மரபணுக்கள் அனைத்தும் புரதங்களால் ஆனது. ஒவ்வொரு புரதமும் பல்லாயிரக்கணக்கான குணாதிசயங்களைக் கொண்டுயிருக்கின்றன. புரதங்களை மாற்றியமைப்பதன் மூலம் உருவாகும் பயிர் வகைகளிலிருந்து கிடைக்கும் உணவுப்பொருட்களால் மரணம் கூடநேரலாம். ஒட்டுரகங்கள் மூலம் ஒரு புதிய பயிரை உருவாக்கலாம், இந்த முறையில் மரபணு மாற்றம் இயல்பாக நடைபெருகிறது. ஆனால் இப்போது பயோ டெக்னாலஜி எனப்படும் உயிரியல் தொழில்நுட்பத்தின் ஒரு பிரிவான மரபணு தொழில்நுட்பத்தில் தேவையான புரதங்களை நமது தேவைக்கு ஏற்ப மாற்றியமைத்து புதிதாக பி.டி பருத்தி போன்று பி.டி கத்திரிக்காய் கண்டறியப்பட்டுள்ளது.
B.T. என்பது Bacillus Thuringiensis என்ற நுண்ணுயிரியின் பெயராகும். இது செடிகளை தாக்கும் பச்சைக் காய்ப்புழு, புள்ளிக் காய்ப்புழு, காய்களை துளைக்கும் புழுக்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது . எப்படி எனில் பி.டி யில் இருந்து எடுக்கப்பட்ட cry 1 A (c) என்ற விஷப்புரதமானது கத்திரி செடியின் மரபணுவுடன் புகுத்தப்படுகிறது. பின் cry 1 A (c)) என்ற விஷ புரதம் செடியின் அனைத்து பாகங்களிலும் உற்பத்தி ஆகிறது. இதனால் செடிகளை எந்த புழுக்களும் தாக்காது என்று செல்லப்படுகிறது. ஆனால் இதே காரணத்தை செல்லி அறிமுகம் செய்யப்பட்டதுதான் பி.டி பருத்தி. (மகாராஷ்ரா, ஆந்திரா, நமது தமிழகத்தில் தர்மபுரி, சேலம் ஆகிய இடங்களில் ஏற்பட்ட விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.)
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி செடிகளில் காய்ப்புழுக்கள் முற்றாக அழிந்து விடுவதில்லை, மாறாக அப்புழுக்கள் எதிர்ப்புத்திறன் பெற்று புதிய வீரியத்துடன் தாக்குகின்றன. 2003 முதல் 2006 வரை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வுகள் இதை நிருபித்துள்ளன. எனவேதான் அனைத்துலக பல்லுயிர் பாதுகாப்புக்குழு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் களச்சோதனை முறையில் பயிரிடுவதற்குக் கூட தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் இத்தொழில் நுட்பத்திற்கும், இதனைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
1960 களில் உணவு பற்றாக்குறையை காரணம் காட்டி பசுமை புரட்சி என்ற பெயரால் கடந்த 50 ஆண்டுகளில் பல ஆயிரம் பாரம்பரிய விதைகளை நாம் இழந்திருக்கிறோம் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. வேதி உரம் மற்றும் பூச்சி கொல்லிகளால் நிலத்தையும், குடிக்கின்ற நீரையும், சுவாசிக்கின்ற காற்றையும் பாழடித்து , அதிலிருந்து மீளமுடியாமல் லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் தற்கொலைகளை நாம் பார்த்துவிட்டோம் .
பசுமை புரட்சி உணவு பற்றாக்குறையை போக்கியது உண்மை ஆனால் அதற்கு என்ன விலை கொடுத்திருக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். உலகம் முழுவதும் இயற்கை விவசாயம், இயற்கை பூச்சிகொல்லி, பாரம்பரிய விதைகளின் மேல் நம்பிக்கை வைக்கும் இந்த காலகட்டத்தில் நாம் மட்டும் ஏன் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களை அறிமுகம் செய்யவேண்டும் என்ன தோன்றுகிறது .
உணவு பற்றாக்குறையை காரணம் காட்டி நாம் பாரம்பரிய விவசாய நுனுக்கங்களை அழீக்க நினைக்கிறார்களோ என்று என்ன தோன்றுகிறது . ஏன்என்றால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் இருந்து உருவாகும் தாவரங்களில் கிடைக்கும் விதைகள் மலட்டு தன்மை வாய்ந்தாக உள்ளது அதவது மீண்டும் முலைக்கும் தன்மையற்றது. இத்தகைய விதை ரகங்கள் வேண்டும் என்றால் அவற்றை உற்பத்தி செய்த நிறுவனத்தை விவசாயிகள் நாடவேண்டி இருக்கும். இதுபோன்ற காரணங்களால் தான் நாம் இன்று 1500 க்கு மேற்பட்ட விதைநெல்லையும், உணவு தானியவகைகளையும் இழந்து நிற்கிறோம் .
புவியின் தட்வவெட்பநிலை, பருவ காலங்கள் பல்வேறு காரணிகளால் வேகமாக மாறுபட்டு கொண்டு இருக்கும் சூழலில். உணவு உற்பத்தியில் இயற்கையோடு இணைந்த புதிய தொழில்நுட்பங்களின் தேவையும் அதிகரித் வருகிறது. இந்த தேவையை தனது லாபநோக்கிற்காக பயன்படுத்தி கொள்ள பல பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. மனிதன் பல நூறு ஆண்டுகளாக இயற்கையோடு இணைந்து விவசாயம் வெய்து தனது உணவு தேவையை எந்த வித பாதிப்பும் இல்லாமல் பூர்த்தி செய்து வந்துள்ளான் . ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு சில நிறுவனங்களின் லபநோக்கிற்காக இற்கை விவசாயம் அழிக்கப்பட்டு மண்ணை நஞ்சாக்கும் பூச்சிக் கொல்லிகளும், சேயற்கை உரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவுகளை நாம் இன்று உணர ஆரம்பித்து வருகிறோம் .
இப்படி பட்ட காலகட்டத்தில் மனிதனால் செயற்கையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் நம் மீதும் நமது சூழலின் மீதும் பல தாக்கங்களை ஏற்படுத்தும். சுற்றுச் சூழலையும், மனிதனையும் அழிக்க வெரும் ஆயுதங்கள் மட்டும் அல்ல, உணவுகளும் இப்போதெல்லாம் பயன்படுகின்றன ஆகையால் விழிப்புடன் இருப்போம் மக்களை விழிப்படைய செய்வேம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக